பதிவு 2: கயிறு ஏறுதல் – போலீஸ் உடற்தகுதி தேர்வில் இரண்டாம் கட்டம்.
- இந்த தேர்வில் வெற்றி பெற எவ்வாறு பயிற்சி எடுத்தால் சிறப்பு என்று பார்க்கலாம் வாருங்கள்.
திருத்திக்கொள்ள வேண்டியவை:
- உரிய பயிற்சி இல்லாமல் கயிறு ஏற முயற்சிப்பது.
- கயிறு ஏறும் பொழுது கால்களால் உந்துதல்.
- கால்களை உபயோகப்படுத்தி ஏறுதல்.
- கயிற்றிலிருந்து இறங்கும் போது கவனம் தேவை. சரித்துக்கொண்டு வந்தால் கைகளில் காயம் உண்டாகும்.
முதற்கட்ட பயிற்சி:
- புஜங்களை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்
- “Push UP” , “Pull UP”, “Chin UP” பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
- “Abs Workouts” பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
இரண்டாம் கட்ட பயிற்சி:
- “Rope Drills” என்று சொல்லக்கூடிய பயிற்சிகளை பெறுவது அவசியம்.
- “Towel Pull up” முறைகளும் மிகவும் உதவிகரமாக அமையும்.
மூன்றாம் கட்ட பயிற்சி:
- ஒரு பயிற்சியாளரின் உதவியோடு சரியான கயிறு ஏறும் யுக்தியை பயில வேண்டும்.
- மீண்டும் மீண்டும் பயிற்சித்து ஏறும் தூரத்தை அதிகப்படுத்துங்கள்.
- மூச்சை சரியான முறையில் கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.
வெற்றி நமதே!
Magadheera Madhan
ISSA Certified Fitness Trainer and Psychologist
Magadheera Academy – www.prt.mfit.in
8124148222, 9952209827